நட்பு அது சொல் அல்ல
வாழ்வு!
நட்பாய் எனில் கலந்த
நண்பா!
ஆயிரம் தடையிலும் நெஞ்சுநிமிர்
நின்றாயே!
காலன் ஒரு கோழை ஆனான்
உன்னால்!
பின்நின்று வீழ்த்தி விட்டானே
உன்னை!
உயிரினில் கலந்த நண்பா
நீ தந்த நினைவலைகள் மனக்கடலில்
அலையலையாய்!
வாழ்க்கை தருணங்களில் தேடுகிறேன்
உனையே!
நீ இல்லா வாழ்வு முழுமையில்லை
முடிவுமில்லை!
நண்பனே!
- சி. எட்வின் சிங்